லான்சியானோவின் நற்கருணை புதுமைகளைப்பற்றிய மற்ற சரித்திர பூர்வமான மற்றும் திருச்சபையின் அதிகார பூர்வமான குறிப்புகள் :
1536 - பாப்பு 4ம் பத்திநாதரின் ஆணை ( Bull ) புனித லெகான்சியனின் ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட இவ்வாணையும் " புதிதாக ஒன்றும் அதில் புதுப்பிக்கப்பட வேண்டாம் " என்று வாசிக்கிறோம்.
1557 - ஜூன் 12 : மாஸ்டிரே பெர்டினண்டோ டி கியாவான்னி டெல்பார்பிரோவின் ஆணை ( Testament ) இது நோட்டரி கியாவனி ஆஞ்சலோ டி பாப்ஸியாவால் எழுதப்பட்டது.
1586 - அருட்திரு டோசியானா எழுதியுள்ளார் :- " லான்சியானோவின் புனித பிரான்சிஸ் ஆலயத்தில் கிறீஸ்துவின் திரு உடலாக மாறிய அப்பமும் கிறீஸ்துவின் திரு இரத்தமாக மாறிய திருப்பண்டமும் இருக்கின்றன.
1593 - ஜூன் 7 : மார்செஸா டி வாஸ்டா லான்ஸியானோவிற்கு வந்த புனித மரியா டெல் பாண்டி ஆலயத்தில் நடந்த ஆயர் பவுலோதார்சோவின் திருப்பலியில் பங்கெடுத்தார். அவள் புனித பிரான்சிஸின் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நற்கருணையிந்திருப்பண்டங்களைத் தரிசித்தாள்.
1594 - 1670ல் வாழ்ந்த பெர்டினான்டோ உகல்லி கீழ்வருமாறு எழுதியுள்ளார் : புனித பிரான்சிஸின் துறவறமடத்தில் பல திருப்பண்டங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றுள் மிகப் புதுமையானது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருச்சரீரமாகவும் திரு இரத்தமாகவும் மாறிய திருப்பண்டங்களே.:
1601 - ஏப்ரல் 26 : ஜெர்மானா கோலானா சீமாட்டியின் மகனாகிய மான்டிலோனின்இளவரசர் புனித பிரான்சிஸ் ஆலயத்தில் திருப்பண்டங்களைத் தரிசித்துச்சென்றார்.
1610 - மே 17 : ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் இவ்வாலயம் " மிகப்புனித கிறீஸ்துவின் சரீரத்தின் ஆலயம் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1631 - ஆகஸ்டு 16 : ஆயர் ஆண்ட்ரூ ஜெர்வாசியோவின் பெயரால் ஆயர்கள் - மறை அதிகாரிகள் திருக் கூட்டத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ( புனித பிரான்சிஸ் ஆலயத்தில் ) கடந்த 400 ஆண்டுகளாக, கிறீஸ்துவின் திருச்சரீரமாகவும், திருஇரத்தமாகவும் மாறிய திருப்பண்டங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
1637 - அகஸ்டு 20 :- மேயர் கியோவான்னி டொம்மோசாரியால்டோவின் வேண்டுகோளுக்கிணங்கி, நோட்டரியான கியாவன்னி பாட்டிஸ்டா வெர்னா கோயில் பாதுகாவலர் செராபினோ ஜக்கார்டோ டா ஸ்கான்னோவின் கீழ்க்கண்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டார். 700ம் ஆண்டில், அன்று புனித லெகான்ஷியன் மடம் என்று அழைக்கப்பட்ட புனித பிரான்சிஸ் ஆலயத்தில், திவ்விய நற்கணையில் அவிசுவாசங் கொண்டிருந்த பேசிலியன் துறவி ஒருவர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். வசீகர வார்த்தைகளை அவர் உச்சரித்ததும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, அப்பம் கிறீஸ்துவின் திருச்சரீரமாகவும் இரத்தம் கிறீஸ்துவின் திரு இரத்தமாகவும் மாறின.
1671 - அக்டோபர் 18 : லான்சியானோவின் புதுமையை மான்சிஞ்ஞோர் அல்போன்ஸா அல்வாரஸ் பார்பா ஒசாரியோ " திருப்பண்டங்களிலெல்லாம் மிகப்பெரிய, மிக அதிசயிக்கத்தக்க திருப்பண்டங்கள் " என வரையறுத்துக்கூறுகிறார்.
1672 - ஜூன் 25 : பாப்பு 10ம் கிளெமெண்ட், திருப்பண்டங்கள் வைத்துள்ள பீடத்தை, விசுவாசிகளின் இறந்த 10ம் நாட்களிலும் வருடத்தின் எல்லாத் திங்கட்கிழமைகளிலும் " சிறப்பு நிலை பீடம் " ஆக விளங்கும் என அறிவித்தார்.
1685 : மடாதிபதி கியோவான்னி பாட்டிஸ்டா பாஸி செல்லி பின்வருமாறு எழுதுகிறார் : பழங்கால புனித பிரான்சிஸின் ஆலயத்தில் முற்காலத்தில் பேசிலியன் துறவிகள் நிர்வாகம் செய்கையில், அவர்களில் ஒருவர் நற்கருணைப் பரமரகசியத்தின் மேல் அவிசுவாசம் கொண்டார். அவர் திருப்பலி நிறைவேற்றுகையில், பெரும் புதுமையாக அப்பம், கிறீஸ்துவின் திரு உடலாகவும், இரசம் திரு இரத்தமாகவும் மாறின. இத்திருப்பண்டங்கள் இன்றும் மிக்க பக்தி வணக்கத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1700 - ஆகஸ்டு 7 : பெர்டினான்டோ டி செக்கோவின் இறுதி உயிலில் " தனது மரணத்திற்குப் பிறகுப் புனித பிரான்சிஸின் ஆலயத்தில் திருப்பண்டங்களின் பீடத்தில் தனக்காக 50 திருப்பலிகள் நிறைவேற்றப்பட வேண்டும் " என எழுதி வைத்திருக்கிறார்.
1717 - பிப்ரவரி 17 : பேராயர் கியோவான்னி உவா, சிசப்பெரிக்கி திருப்பண்டங்களின் சாவியை டி. தொமினிக்கோ போஸியானோவிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டார்.
1728 - ஜூலை 30 : மான்சிஞ்ஞோர் அன்டோனியோ பேட்டர்னோலின் பத்திரம் பின்வருமாறு உத்தரவிட்டுள்ளது. " பேராயர் பதவி நிரப்பப்படும் வரை புனித திருப்பண்டங்களின் சாவியை அருட்திரு டோன் சில்வெஸ்டிரோ டி செக்கோ வைத்திருந்து புதிய பேராயர் நியமிக்கப்பட்டதும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். "
1743 - ஏப்ரல் 18 : நகர மாஜிஸ்டிரேட்டான கரோல் சினெரினி, நோட்டரி பிரான்சிஸ்கோ மாட்ரிகல்ஸ் கையால் பின்வருமாறு எழுதி வைத்துள்ளார் : பலரது வேண்டுகோளுக்கிணங்க, கிறீஸ்துவின் திருச்சரீரம் திருஇரத்தம் பாதுகாக்கப்பட்டு வணக்கத்துக்குரிய புனித பிரான்சிஸ் ஆலயம் சென்று அங்கு பீடமருகில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நற்கருணையின் திருப்பண்டங்களைத் தரிசித்தோம்.
1787 - ஏப்ரல் 20 : கிறீஸ்துவின் திருச்சரீரமாக மாறிய திருப்பண்டத்தை பேராயர் டி விவோ தரிசிகிறார்.
1799 - மே 19 : குடிமக்களின் வேண்டுகோளுக்கிணங்கி, பேராயர் பிரான்சிஸ்கோ அமாரசோ, மிகவும் துன்பங்கள் பிரச்சனைகள் நிறைந்த நேரத்தில் மட்டும் சுற்றுப்பிரகாரமாக எடுத்துச்செல்லப்படும் திருப்பண்டங்களை, குருக்களும் துறவிகளும் இறை மக்களும் சேர்ந்து தவ ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார்.
1800 - செப்டம்பர் 27 : நேப்பிள்ஸின் அரசவையின் ஆணையின் கீழ், மாண்டியாஸியின் இளவரசர் பெரிய குருவுக்கு ( Capitular Vicar ) எழுதிய கடிதத்தில் விசேட பக்திக்குரிய தலங்கள் உள்ளனவா என்று கேட்கிறார். பெரிய குரு, தனது பதிலில் இயேசுவின் திருச்சதையாகவும், திருஇரத்தமாகவும் புதுமையாக மாறிய திருப்பண்டங்கள் லான்சியானோவின் புனித பிரான்சிஸ் ஆலயத்தில் உள்ளன என்று கூறியுள்ளார்.
1868 - ஜூலை 09 : 45 நாட்களாக பெய்த அடை மழையால் கிராமப்புறங்கள் யாவும் வெள்ளக்காடாயின. கவலைக்குள்ளாகிய மக்களால் திருப்பண்டங்களை திருயாத்திரையாக எடுத்துச் செல்லக் கேட்கப்பட்டது. பெரு மழையையும் பொருட்படுத்தாமல், திருப்பண்டங்கள் ஊர்வலமாக கோவிலிலிருந்து எடுத்து வரப்படுகிறது. அவர்கள் பொதுச்சதுக்கத்தை அடையும் முன் பெருங்காற்று வந்து மேகங்களை அடித்துக் கலைத்து விட்டது.
1886 - செப்டம்பர் 16 : திருச்சபையின் விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் தர அருட்திரு. சன்னா சோலோரோவை அனுப்பி வைப்பதாகக் கர்தினால் காட்டானா அலிமோண்டா மான்சிஞ்ஞோர் பெட்ரார்காவுக்கு எழுதுகிறார்.
1889 - ஆகஸ்டு 05 : " லான்சியானோவின் பேராயர், குருக்கள் இறைமக்களின் வாழ்த்துக்கள் " என்னும் வாசகத்தை கொண்டுள்ள திரைச்சீலை ( Banner )ன்னிடம் இருப்பதாக இத்தாலிய சொஸைட்டியின் தலைவரான அருட்திரு. சோலோரோ பேராயர் மான்சிஞ்ஞோர் பெட்ரார்கோவுக்கு எழுதுகிறார். இத்திரை பிரான்ஸ் நாட்டிலுள்ள " பாரலே மோனியஸ் " என்னும் திருத்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
1904 அக்டோபர் 04 : மோன்சிஞ்ஞோர் ஆஞ்சலோ டல்லா சியோப்பா " அனுதின ஆராதனைக் குழு "வை ஏற்படுத்தி, இத்திருப்பீடம் " ஆராதனையின் பீடம் " என அழைக்கப்படச் செய்தார்.
1974 - நவம்பர் 03 : முன்னாள் கிராக்கோ பேராயரான மிக வந். கர்தினால் கரோல் வோட்டிலா, 1978 அக்டோபர் 16ல் திருச்சபையின் பாப்பிறையாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இத்திருத்தலத்தை சந்தித்து செல்லுகையில் தனது இதய உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டுச் சென்றார்.
| Next Page |