லான்சியானோவிலுள்ள புனித பிரான்சிஸ் ஆலயத்தில் நிகழ்ந்த நற்கருணைப் புதுமை உண்மை என பிரகடனங்கள் பற்றிய அறிக்கை :
" Friars Minor Coventual " ( பிரையர்ஸ் மைனர் கன்வென்ஷீயல் ) சபையினரிடம் நற்கருணைத் திருப்பண்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவர்கள், 1970ல், லான்சியானோவின் பேராயர் பஸிபிகோ பேரன்டோனி, ஆயர் ஓர்டோனோ மற்றும் அவர்களதுசபையின் மாநில சிரேஷ்டர் அருட்திரு. புரூனோ லூசியானி இவர்களது வேண்டுகோளுக்கிணங்கி விஞ்ஞான ரீதியில் இத்திருப்பண்டங்களை ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்தனர்.
இது நெப்போலியனின் கொடுங்கோன்மையினால் ஏற்பட்ட நீணட இடைவெளிக்குப் பின் 1953ல் " பிரையர்ஸ் மைனர் கன்வென்ஷீயல் " சபையினரிடம் அப்போதைய லான்சியானோவின் பேராயர் பெக்னுனோ மிக்லியோரினி இத்திருத்தலத்தைஒப்படைத்த பிறகு எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு ஆகும்.
இந்த ஆராய்ச்சியை நடத்தும் பொறுப்பு அரெஸ்ஸோ நகரின் " ஐக்கிய ஆஸ்பத்திரிகளில் " தலைமை டாக்டர்களாகப் பணியாற்றிய புரொபஸர், டாக்டர் ஓடோரேர்டோ லினோலியிடம் ஒப்படைக்கப்பட்டது. மாபெரும் பொறுப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த இந்தப் பணிக்கு மனித மற்றும் விஞ்ஞான மட்டங்களில் தேவையான எல்லா உத்திரவாதங்களையும் அவர் அளித்தார்.
சியென்னா பல்கலைக்கழகத்தில் எமெரிஷீயஸ் பேராசிரியராக இருந்த புரொபஸர் டாக்டர் ருக்கேரோ பெர்ட்டெல்லியையும் தன்னுடைய ஆராய்ச்சி பணியில் புரொபஸர் லினொலி சேர்த்துக்கொண்டார்.
இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப காரணங்களுக்காக இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.
முதல் பாகம் : திருப்பண்டங்களிலிருந்து சில மாதிரிகளை ( Samples ) புரொபஸர் லினோலி எடுத்து அரெஸ்ஸோவிலுள்ள தனது ஆராய்ச்சி கூடத்திற்கு எடுத்துச் செல்வது.
இரண்டாம் பாகம் : ஆராய்ச்சி பூர்த்தியானதும் அதன் விஞ்ஞான அறிக்கையைப் புரொபஸர் லினோலி சமர்ப்பிப்பது.
1970ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி காலை 10 : 00 மணிக்கு மேற்சொன்ன விஞ்ஞான ரீதி ஆராய்ச்சியை ஆரம்பிக்க அதன் முதல் பாகமாக, கீழ்க்கண்டவர்கள் கூட்டமாக சக்ரீஸ்டிக்கு வந்தனர் :
மிக வந்திக்தக்க மான்சிஞ்ஞோர் பேஸிபிகோ பேரன் டோனி, லான்சியானோவின் பேராயர் ஓர்டோனோ அவர்கள்.
அதிவண, அருட்தந்தை புருனோ லூசியானி, அப்ரூஸி பகுதி மைனர் கன்வென்ஷியல் சபையின் சிரேஷ்டர் புரொபஸர் டாக்டர் ஒடார்டோ லினோலி, அரெஸ்ஸோ யுனைட்டெட் ஆஸ்பத்திரிகளின் தலைமை வைத்தியர்.
அருட்திரு. அடோன் கிசப்பே கேஸ்டிக்கிலியோன், லான்சியானொ மறைமாவட்டத்தின் சன்சலர்.
அருட்திரு. அனஸ்டாசியோ போலெட்டோ, மான்சிஞ்ஞோர் பேராயரின் செக்ரட்டரி.
அருட்திரு. அமெடியோ, அருட்திரு. லிகுயிலாரல்லா, அருட்திரு. கிரனானியோ, பிரையர் மைனர் கன்வென்ஷியல் சபைக்குருக்கள், லான்சியானோவின் துறவறமடத்தின் சிரேஷ்டர் சுவாமி ஆஞ்செலோ ஸெனேபியோ, அருட்திரு. ஜார்ஜியோ டி பெபோ, அருட்திரு. லுகி மரியனோ, சங். சகோதரர் மாசிலி மிலியானோ டி கிறிஸ்டோபேர மற்றும் அம்மடத்தைச் சேர்ந்த அனைவரும் காலை 10 : 15 மணி - மிகவண. மான்சிஞ்ஞோர் பேராயர் முத்திரயை உடைக்கிறார் - திருச்சரீரமும் திரு இரத்தமும் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் திறக்கப்படுகின்றன - திருச்சரீரம் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் முத்திரையிட்டு நன்கு மூடப்படாத நிலையில் இருந்ததால் உருப்பெருக்கி ( மைக்ரோஸ்கோப் ) யினால் பார்க்கையில் சில தூசு போன்ற வெளிப்பொருட்கள் காணப்படுகின்றன.
திருச்சரீரத்தை பரிசோதித்த புரொபஸர் டாக்டர் லினோலி பரிசோதனை அறையில் அதைப் பாகுபடுத்திப் பார்க்கையில் அதன் தசையின் மூலப்பொருட்கள் இனம்பிரிக்குமளவுக்குத் தெரியுமா என்ற ஐயத்தைக் கூறினார்.
அதன் பின்னர், திரு இரத்தத்தைப் பரிசோதிக்கலானார். புரொபஸர் லினோலி இரத்தத்துண்டுகளின் உட்புறமிருந்து சில துணுக்குகளை வெளியிலெடுத்து அவற்றின் மூலப்பொருட்களை இனங்காண நினைத்தார். முதலில் ஐந்து இரத்தத்துண்டுகளின் எடைகளை நிறுக்க தீர்மானித்தார்.
அவற்றின் மொத்த எடை, 1886ல் இருந்தது போலவே, 16 - கிராம் - 505 - மில்லி கிராம்கள் இருந்தன.
1574 பிப்ரவரி 17ல் பிரகடனப்படுத்தப்பட்டும், 1636ல் புனித பிரான்சிஸ் ஆலய பீடத்தின் பக்கத்தில் பதிக்கப்பட்ட பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்ட, மிகவும் அதிசயத்தை அதாவது, இரத்தத்துண்டுகளை எப்படிப் பிரித்து இரு தராசுகளிலும் வைத்தாலும் அவை சம எடையனவாய் இருந்தன என்ற கூற்றை 1886ல் செய்தது போலவே இந்தப்பிரகடனத்திலும் சோதித்துப் பார்க்கப்படவில்லை. மாதிரிகள் எடுத்து முடிந்ததும் நற்கருணைப் பாத்திரமும், கிண்ணமும் மறுபடியும் மூடப்பட்டு மிகவண. மான்சிஞ்ஞோர் பேராயர் பேஸிபிகோபேரன்டோனி அவர்களால் முத்திரையிடப்பட்டது.