மனமாற்றத்தைப் பற்றி ஒரு திரைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பானிஸ் நாட்டு படப்பிடிப்பாளர் இந்த புதிய திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். தெருவோரமாகத் திரிந்த இளைஞர்கள் குழு ஒன்று மனமாறி குருக்களாக மாறுவதும், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மனம்மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதும் இந்த திரைப்படத்தினுடையா மையக்கருத்தாக அமைந்திருக்கின்றது. திரைப்படத்தயாரிப்பாளர் சி என் எ செய்திக்குத் தெரிவிக்கையில் தன்னுடைய கருத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றார். " கடவுளின் அன்பினால் ஒருவர் ஆட்கொள்ளப்படுவதை விட சிறந்த செய்தி வேறு எதுவும் இல்லை." இப்படியான ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது என்று கேட்டபோது, அவருடைய பதில் இவ்வாறு இருந்தது." எனக்கு இப்படியான ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை , அப்படி நினைக்கவும் இல்லை. பலருடைய வாழ்க்கை அனுபவங்கள் , அவர்களுடன் பகிரும்போது தாங்கள் எப்படி மனம்மாறி கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம். அதைவிட சிறந்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை அனுபவங்களே இப்படியான படத்தை எடுக்க தீர்மானித்தது. இத்திரைப்படத்தில் என்னுடைய எந்தவிதமான கற்பனைகளும் இல்லை. எல்லாமே பலருடைய அனுபவங்கள். இதிதிரைப்படம் 11ம் திகதி இணயத்தளத்தில் பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
|