Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

Miracles

   
 

 
 

 

தேவதாயின் அற்புதமான பிறப்பும்
ஞானம் நிறைந்த வாழ்வும்.......

 


ஒன்பது மாதம் சென்ற பின்,பேறுகாலம் அண்மித்துவிட்டதை ஆண்டவர் புனித அன்னம்மாளுக்கு அறிவித்தார்.
அத்தருணத்தில் தனக்கு உதவியாய் வரவேண்டுமென்று அவள் ஆண்டவரை வேண்டிகொண்டாள். ஆண்டவருடைய
கிருபையால் அவளது ஆத்துமம் மகிழ்ச்சியால் அக்களித்தது. அந்நாட்களில் செப்ரெம்பர் எட்டாம் நாள் நடுச்சாமத்தில்
அந்தப் பரிசுத்த குழந்தை பிறந்தது.

 

அப்போது அவள் ஆனந்தப் பரவசத்தில் அமிழ்ந்து இருந்தாள்.பிள்ளைப் பேற்றின்
வருத்தத்தை அடையாமல் உடனேயே குழந்தையைத் துணிகளில் பொதித்து தனது கரங்களில் ஏந்திக்கொண்டு ஆண்டவரை
நோக்கி "எல்லையற்ற ஞானமுடையவரான ஆண்டவரே! எல்லாப் படைப்புகளையும் படைப்பவரே! உமது முடிவற்ற நன்மைத்
தனத்தினால் என் வயிற்றில் நான் கொண்ட கனியை உமக்கு ஒப்புகொடுக்கின்றேன். என் உள்ளம் கொண்ட மட்டும்
தாழ்ச்சியோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கின்றேன்.உமது சிம்மாசனத்தில் நின்று எங்கள் சிலுவையைக் கண்ணோக்கி
தாயையும் பிள்ளையையும் உமது சித்தப்படி நடத்தும்.

 

பிதாப்பிதாக்களும் சகல மனுக்குலத்துக்கும் மீட்பு உண்டானதால் அவர்கள்
மட்டில் நான் அகமகிழ்கிறேன். நான் இந்தக் குழந்தைக்கு வேலைக் காரியாய் இருக்கக்கூட தகுதியற்றவள். இக்குழந்தை ஏற்பாட்டின்
மெய்யான பொக்கிஷமல்லவோ! அவ்வாறிருக்க ஆண்டவரே! நான் அவள் பேரில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று
திருவுளம்பற்றும்" என்றாள்.

 

 

இச் செபம் முடிந்ததும் இறைவன் புனித அன்னம்மாளுக்கு"நீ இக் குழந்தையை வெளியில் உன்
பிள்ளைபோல் நடத்து; உன் உள்ளத்தில் அதன் மட்டில் பக்தியும் மரியாதையும் கொண்டிரு"என்றார்.
இவ்வார்த்தைகளை இறைவன் சொன்ன பின் புனித அன்னம்மாளின் கரத்திலேயிருந்த திருப்பாலகியை சம்மனசுகள் வந்து
வணங்கித் துதித்தார்கள். சம்மனசுகளை சரீர உருவத்தோடு அந்தக் குழந்தை பர்த்தது, அவளுக்கு காவலாக நியமிக்கப்பட்டிருந்த
ஆயிரம் சம்மனசுகளும் அவளை வணங்கினார்கள்.

 

 

கடவுள் இவ்விடயத்தை பாதாளத்தில் இருக்கும் பிதாப்பிதாக்களுக்கு
தெரிவிக்க கபிரியேல் என்ற சம்மனசானவரை அணுப்பினார். பின் பரலோகத்தில் இருந்து கணக்கற்ற சம்மனசுகள் வந்து அவளை
தூக்கிக்கொண்டு போனார்கள். அத்திருபாலகி இறை சமூகத்தில் சாஷ்டான்ங்கமாக விழுந்து வணங்கினாள்.ஆண்டவர் தமது
சிம்மாசனத்தின் அருகிலே சகல சிருஷ்டிகளுக்கும் இராக்கினியாக அவளை உட்கார வைத்தார். அவள் ஆண்டவருக்கு
தாயாராக போகிறதையும் சகல படைப்புகளுக்கும் இராக்கினியாகப் போவதையும் கடவுள் அவளுக்குச் சொல்லாமல் மறைத்து
வைத்தார்.

 

 

இவளுக்கு ஒரு பெயர் இடவேண்டும் என்று கடவுள் சித்தங்கொள்ளவே இறை சிம்மாசனத்தினின்று ஒர் சத்தம்
புறப்பட்டு "நாம் தெரிந்து கொண்டவளுக்கு பெயர் மரியாள். இப் பெயர் அற்புத மாட்சியுடையதாகும். இப் பெயரைக் குறித்து
பக்தியோடு வேண்டுபவர்கள் அநேக வரங்களைப் பெறுவார்கள். அந்தப் பெயரே நரகத்துக்குப் பயமூட்டி சர்ப்பத்தின் தலையை
நசுக்கும்" என்றது.

 

 

அக்குழந்தைக்கு இந்தப் பெயரை இடும்படி அன்னம்மாளுக்குச் சொல்லுமாறு கடவுள் தம் தூதர்களுக்குக்
கட்டளையிட்டார். அவர்கள் அப்பெயர் எழுதப்பட்டிருந்த பிரகாசமான கேடயங்களைக் கரங்களில் ஏந்திக்கொண்டு
அச்செய்தியை புனித அன்னம்மாளுக்குத் தெரிவித்தனர். அப்பொழுது குழந்தை அன்னம்மாள் கைகளில் கொடுக்கப்பட்டது.
அன்னம்மாள் பரவசத்தில் இருந்தபடியினாலும், அவள் கையில் சரீரம் கொண்ட சம்மனசு இருந்தபடியினாலும் குழந்தை
மோட்சத்துக்கு எடுக்கப்பட்டதை அவள் அறியாதிருந்தாள்.

 

அத் திருக்குழந்தை தினந்தோறும் மனதார இறை சந்நிதானத்தில்
சாஷ்டங்கமாய் விழுந்து ஆனந்தம் பொழியும் தெய்வீக மகிமையில் மகிழும், வெறுமையினின்று தன்னை உருவாக்கியமைக்காக
தனது அன்பு வணக்கங்களை செலுத்தும்.தன்னை முழுவதும் தாழ்ச்சியோடு இறைவனுக்கு ஒப்புகொடுத்து, தான்
செய்யவேண்டியது என்னவென்று இறைவனைக் கேட்கும். இச் செயலை அத் திருக்குழந்தையானவள் தன் வாழ்நாள் முழுவதும்
கடைபிடித்து வந்தாள்.

 

 

சுத்திகரத்தின் அறுபத்தைந்து நாள் சென்றபின் புனித அன்னம்மாள் அத்திருப் பாலகியை இறைபாதத்தில் காணிக்கை
கொடுக்கச் சென்ற போது அங்கிருந்த பெரிய குருவாகிய சிமியோனுக்கு ஒரு ஆச்சரியமான பரவசம் உண்டாயிற்று.
அன்னம்மாள் குழந்தையை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும் வார்த்தைப் பாட்டைப் புதுப்பித்தாள்.
குழந்தையானவள் தேவ ஆராதனையின் சிறப்பினைக் கண்டு மகிழ்ந்து, சாஷ்டாங்கமாக விழுந்து துதிக்க முடியாதளவு
மிகக்குழந்தை ஆதலால் தனது ஞான அறிவினால் அதனைச் செய்தாள். அதனால் இறைவன் மகிழ்வடைந்து தாய்க்கும்
குழந்தைக்கும் பரலோக ஒளியை முழுநிறைவாக கொடுத்தார்.

 

 

திருக்குழந்தையானவள் சிறிது நேரமே துயில் கொள்வாள், அதிக நேரம்
செபம் செய்வாள். மனிதரின் பாவத்திற்காக அழுவாள்.ஒளி பொருந்திய அவளது கன்னங்களில் கண்ணீர் ஓடும். உலக மீட்பரின்
வரவை வேண்டி மன்றாடுவாள். தனிமையில் இருக்கும்போது உலக மீட்பர் சிலுவையில் அறையப்படுவதைப் போல எண்ணி
கைகளை விரித்து செபிப்பாள். அவள்பிரதான செயல் சம்மனசுகளோடு பேசுவதாகும். அவளுக்கு காட்சியளித்த சம்மனசுகள்
ஆண்டவருடைய ஒன்றிப்பிலும், அவள் இறைவனுக்கு தாயாவதிலும் மகிழ்ச்சி கொண்டவர்கள். அவர்கள் நவ விலாச
சபையினின்று அணிக்கு நூறுபேர் வீதம் தெரியப்பட்டவர்கள்.

 

அவர்கள் பேரழகு பொருந்திய வாலிபத் தோற்றம்
உடையவர்கள்.விண் ஒளி சிந்தும் பளிங்கு போன்ற அவர்களின் தோற்றத்துக்கு சூரியனுடைய ஒளியும் நிகராகது
அவர்களுடைய ஆடை அற்புதமும் ஆச்சரியமுமான பல வர்ணம் கொண்ட தங்கமயமானது. அவர்கள் சிரசில் அணிந்திருந்த
முடியிலுள்ள மலர்களிலிருந்து விண்ணக நறுமனம் வீசும். சம்மனசுகள் தமது கைகளில் மரியள் இனிச் செய்யப்போகின்ற
புண்ணியங்களுடையனவும், மகிமையுடையனவும் வெற்றிக் கொடிகளை பிடித்திருப்பார்கள். அவர்கள் மார்பில் அணிந்திருக்கும்
பதக்கத்தில் இறைவனின் தாயாகிய மரியாள் என்று எழுதப்பட்டிருக்கும். அதன் அர்த்தத்தை இறைவன் மனுவுருவாகுமுன்
அவள் புரிந்து கொள்ளவில்லை.

 

 

அவள் சம்மனசுகளோடு பேசுவதில் அடையும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. சம்மனசுகள்
மரியாளுக்கு காட்சி அளிக்கும் போது இரு இறக்கைகளால் தமது முகத்தை மூடிக்கொண்டும், இரு இறக்கைகளால் தமது
பாதங்களை மூடிக்கொண்டும், மற்றைய இரு இறக்கைகளால் பறந்து கொண்டும் இருபார்கள். மரியாளை முழுநிறைவான
பக்தியோடு வேண்டுபவர்களுக்கு உன்னதமான வரங்களை வழங்க பன்னிரண்டு சம்மனசுகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விட உலக மீட்பரின் பாடுகளில் பக்திகொண்டிருந்த மேலும் பதினெட்டு சம்மனசுகளும் இருந்தனர். இவர்கள்
மார்பில் ஒரு சிலுவையும்,புயத்தில் ஒரு சிலுவையும் இருக்கும். அச் சிலுவைகளுக்கு அதிசயமும் அற்புதமுமான பேரழகு
பொருந்தியிருப்பதால் கண்களை பிரம்மிக்கச்செய்யும்.

 

 

திருப் பாலகியான மரியாள் பேசுவதற்கு சக்தி கொண்டிருந்தாள். எனினும் இறை
சித்தத்துக்கிணங்க பதினெட்டு மாதங்கள் வரையில் அவள் மனிதரிடத்தில் பேசியதில்லை. அவள் சம்மனசுகளுடனும்
இறைவனுடனும் மாத்திரமே பேசுவாள். முதன் முறையாக அவள் பேசுவதற்கு முன் தன் பேச்சில் தவறு ஏற்படாதிருக்க
இறைவனை மன்றாடினால். அவள் வேண்டியவாறே இறைவன் வார்த்தைவரம் கொடுத்த பின்பு நாவை திறந்து தன்
பெற்றோரிடம் ஆசி வேண்டினாள். பதினெட்டு மாதம் களிந்த பின் சரீர ஒன்றிப்பைக் குறித்தும், இறைவனை குறித்தும்,
பெற்றோர் தன்னிடம் பேசும் போது மட்டும் பதில் மொழி கூறுவாள்.
சாம்பல் நிறமுடைய ஆடையையே தனக்கு தரும் படி அவள் தன் தாயிடம் வேண்ட அவளும் அவ்வாறே கொடுத்தாள். வீட்டைப் பெருக்குவாள், பெற்றோருக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பாள்.


Next Page